shadow

8இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று அறிவித்துள்ள ஒரு அறிவிப்பில் இனி 5 கிலோ இடையுள்ள கேஸ் சிலிண்டர் சூப்பர் மார்க்கெட் மற்றும் சிறு கடைகளிலும் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சூப்பர் மார்க்கெட் மற்றும் சிறு கடைகளில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 5 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு, கோரக்பூர், லக்னௌ, அலிகர் ஆகிய 5 நகரங்களில் முதல்கட்டமாக தொடங்கப்பட்ட இத்திட்டம் கூடியவிரைவில் மேலும் 50 மாநகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.

முதல்முறையாக கேஸ் சிலிண்டர் வாங்கும்போது மட்டும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அதாவது வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பணியாளர் அடையாள அட்டை, மாணவர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து கேஸ் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சிலிண்டர்களுக்கு மானியம் கிடையாது எனினும் தட்டுப்பாடின்றி கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கும். 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600 முதல் ரூ. 1,700 வரை இருக்கும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பெட்ரோல் பங்க்களில் 5 கிலோ எடையுள்ள இந்த கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வந்தது. வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலை நிமித்தம் அந்த ஊழியர்களுக்கு இந்த கேஸ் சிலிண்டர்கள் பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply