இந்தப் படம் இந்தியாவுக்கு ஓகே வா?

Song_Hate Story 3_Zareen Khan_Sharman Joshi

இந்தியின் சென்சேஷனல் படமாக அனைவரையும் அதிர்ச்சியில் ஆட்படுத்தும் பட சீரிஸ்ஹேட் ஸ்டோரி 3. இந்தப் படத்தின் மூன்று பாகங்களுமே நெருக்கமான காட்சிகளுக்காகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் கதைக்காகவும் புகழ் பெற்றவை.

சமீபத்தில் வெளியான இந்த சீரிஸின் மூன்றாம் பாகம் , முந்தைய இரண்டு பாகங்களைக் காட்டிலும் இன்னும் நெருக்கமான காட்சிகளுடன் களமிறங்கி அனைவரையும் கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது. மேலும் ஸ்பெக்டர்  படத்தின் முத்தக் காட்சிகளை நீக்கிய சென்சார் தரப்பு இந்தப் படத்தை எப்படி விட்டன எனவும் கேள்விகள் எழுந்துள்ளன. 

படத்துக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்தாலும் பல காட்சிகள் நீக்கப்பட்டாலும் காட்சிகள் அழுத்தமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. படம் கிட்டத்தட்ட குடும்பங்கள் பார்க்கும் மால் தியேட்டர்களில் மற்றதிரைப்படங்களுடன் ஓடுவது இன்னும் பிரச்னைக்கு ஆளாகியுள்ளது. முன்னரெல்லாம் இதுபோன்ற படங்கள் ஏதேனும் லோக்கல் திரையரங்குகளில் வெளியாகி அதற்கான மக்கள் அங்கே போய் படம் பார்ப்பது வழக்கம். இப்போது இது மிக சாதரணமாக அனைத்துப் படங்களுக்கும் மத்தியில் வெளியாவது சமூக ஆரவலர்களைக் கேள்விகள் கேட்க வைத்துள்ளன.

Leave a Reply