shadow

ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்த கட்சி பிரமுகர்கள் அனைவரும் நீக்கம். சிறைக்கு செல்லும் முன் சசிகலா அதிரடி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, சிறைக்கு செல்வதற்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்த சசிகலா, அடுத்த அதிரடியாக ஓபிஎஸ் அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவளித்த கே.பி.முனுசாமி, கே.பாண்டியராஜன், ப.மோகன், மனோஜ் பாண்டியன் ஆகியோர்களையும் கட்சியிலிருந்து சசிகலா அதிரடியாக நீக்கியுள்ளார்.

மேலும் J.C.D. பிரபாகர், ஜெயபால், தவசி, செல்வம், ராஜேந்திரபிரசாத், முகில், பரிதி இளம்வழுதி, பொன்னுசாமி, நீலகண்டன், ஐயப்பன், முத்துராமலிங்கம், முத்துசெல்வி ஆகியோர்களும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்

Leave a Reply