தொற்றுநோய்களை விரட்டும் மகா சுதர்சன மாத்திரை

tablet_2654676f

தொடர் மழையால் சிறு குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோயாளர்கள், கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சத்து குறைவாக உள்ளவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள்.

சிறு தலைவலிக்காக மருத்துவமனை சென்றால்கூட, குறைந்தது இருநூறு ரூபாய் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது. காய்ச்சலாக இருந்தால் ஒரு வாரத்துக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகிறது.

மலிவு விலை மருந்து

தினசரிக் கூலித் தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும்? அதுவும் தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்து உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்குத் தொற்றுநோய் ஏற்பட்டாலோ, விஷக் காய்ச்சல் வந்தாலோ என்ன செய்வார்கள்? எப்படி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்?

பயப்படத் தேவையில்லை. இதற்கு மிக மலிவான சித்த மருந்து உள்ளது. தொற்று நோய்கள் தாக்காமலும், விஷக் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் வராமலும், டெங்கு, சிக்குன் குன்யாவை விரட்டவும், சளி, இருமல், தும்மலைத் தடுக்க இருக்கவே இருக்கிறது மகா சுதர்சன சித்த மாத்திரை. இந்த மாத்திரையில் 45 வகை மூலிகைகள் மற்றும் படிகாரம் கலந்துள்ளது.

தீரும் நோய்கள்

அனைத்து வகை காய்ச்சல் (விஷக் காய்ச்சல், மர்மக் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குன்யா, டைபாய்டு, மலேரியா, குளிர் காய்ச்சல்), சளி, இருமல், தும்மல், மூச்சடைப்பு, உடல்வலி, தலைவலி, தலை பாரம், மூட்டு வலிகள், தொற்று நோய்களுக்குத் தடுப்பு மருந்தாக, ஆஸ்துமா, நாள்பட்ட சர்க்கரை நோய், தோல் நோய்கள், எய்ட்ஸ், புற்று நோய் ஆகிய அனைத்துக்கும் தீர்வு தரும் ஒரே மருந்து, இந்த மகா சுதர்சன சித்த மாத்திரை.

மாத்திரை அளவு

ஒரு வயதிலிருந்து ஐந்து வயதுவரை ½ மாத்திரை மூன்று வேளை. தேன், பால், வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். ஐந்து வயதிலிருந்து 15 வயதுவரை ஒரு மாத்திரை மூன்று வேளை. தேன், பால், வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். 15 வயதிலிருந்து எந்த வயதினருக்கும் இரண்டு மாத்திரை மூன்று வேளை. ஆகாரத்துக்குப் பிறகு வெந்நீரில் சேர்த்துச் சாப்பிடவும். நோயின் தீவிரத்துக்கேற்ப ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை தரலாம். இதனுடன் மருத்துவரின் ஆலோசனை பெற்று நிலவேம்புக் குடிநீர் எடுத்துக்கொள்ளவும்.

உணவு

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இட்லி, இடியாப்பம், அரிசிக் கஞ்சி, பருப்பு கலந்த சாதம் போன்றவை. தேவைப்பட்டால் ஆங்கில மருந்தைச் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். பலன் அதிகம், பக்க விளைவு தடுக்கப்படும். அனைத்துச் சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் இந்த மாத்திரை கிடைக்கிறது. விலை மிக மிகக் குறைவு.

உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வேறு பல நோய்கள் உள்ளவர்கள் தொடர்ந்து மகா சுதர்சன மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவர் ஆலோசனை பெற்று அனைவரும் காலை இரண்டு மாத்திரை, இரவு இரண்டு மாத்திரை உணவுக்குப் பிறகு சாப்பிட்டுவர, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல், சகல நோய்களையும் கட்டுப்படுத்திச் சங்கடங்களை நீக்கும்.

Leave a Reply

Your email address will not be published.