மேஷம்
மேஷம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அழகு, இளமைக் கூடும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திட்டம் நிறைவேறும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: மதியம் மணி 2.45 வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுக்க பாருங்கள். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

மிதுனம்
மிதுனம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளா தீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக் கும். மதியம் மணி 2.45 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

கடகம்
கடகம்: குடும்பத்தாரின் எண்ணத்தை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆறுதலடைவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். இனிமையான நாள்.

சிம்மம்
சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி
கன்னி: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை அதிகாரிகளால் ஏற்கப்படும். சாதித்துக் காட்டும் நாள்.

துலாம்
துலாம்: மதியம் மணி 2.45 வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. உறவினர், நண்பர்கள் அன்புத் தொல்லை அதிகரிக்கும். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: கணவன்,மனைவி க்குள் ஆரோக்யமான விவாதம் வந்து போகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தாய்வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 2.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

தனுசு
தனுசு: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்
மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்
கும்பம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். சகோதரி உதவுவார். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்
மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.

Leave a Reply