shadow

சுற்றுலா படகில் தீவிபத்து. தண்ணீரில் குதித்து தப்பிய கேப்டன் கைது

shadow

இந்தோனேஷியாவில் சுற்றுலா படகு ஒன்று தீப்பற்றி ஏற்பட்ட விபத்தில் 23 பேர் தீயில் கருகி பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்து நேர்ந்தபோது பயணிகளை காப்பாற்றாமல் தனது உயிரை காப்பாற்ற முதலில் தண்ணீரில் குதித்து உயிர் தப்பிய படகு கேப்டன் கைது செய்யப்பட்டார்.

வடக்கு ஜகார்தாவில் 100க்கும் மேலான சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா படகு திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்தது. இதனால் நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரில் குதிக்க தயங்கியதால் அவர்களை தீ பொசுக்கியது. இந்தவிபத்தில் 23 பேர் பலியாகியதாகவும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளை காக்க வேண்டிய பொறுப்பை உடைய படகின் கேப்டன் முதல் ஆளாக தண்ணீரில் குதித்து உயிர் பிழைத்தார். அவர் தனது கடமையை செய்ய தவறியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply