shadow

images (3)

டெல்லி: இந்தோ-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு(IUSSTF), இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ்வரும், அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்துடன்(SERB) இணைந்து, இந்தோ-அமெரிக்க ஆராய்ச்சி உதவித்தொகையை அறிவித்துள்ளது.

இந்த உதவித்தொகையின் மூலம், அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில், ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியும்.

கல்வித்தகுதி – அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் அல்லது மருத்துவம் போன்ற துறைகளில் பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும். மேலும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி ஜர்னல்களில், பணிபுரிந்த சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

வயது – 31, டிசம்பர் 2012 தேதியில், அதிகபட்சம் 40 வயது அடைந்தவராக இருக்கலாம்.

உதவித்தொகை விபரங்கள்

மாதாந்திர உதவித்தொகை, Preparatory உதவித்தொகை, திரும்பி வருவதற்கான விமானக் கட்டணம், கான்பரன்ஸ் உதவிததொகைகள் போன்றவை.

உதவித்தொகை காலகட்டம் – குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் அதிகபட்சம் 12 மாதங்கள் வரை.

விண்ணப்பிக்கும் கடைசித் தேதி மார்ச் 8. இதர அனைத்து விபரங்களையும் அறிய www.indousstf.org என்ற வலைத்தளம் செல்க.

Leave a Reply