விமான சேவைகள் ரத்து: இண்டிகோ நிறுவனத்தின் அதிரடி முடிவு~!

கொரோனா பரவல் காரணமாக இண்டிகோ நிறுவனம் 20% விமான சேவையை ரத்து செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல் அதிகமாகி வருவதன் காரணமாக இண்டிகோ நிறுவனம் 20 சதவீத விமான சேவைகளை ரத்து செய்வதாகவும், விமான பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் பயண திட்டத்தை மாற்றி கொள்ளலாம் அல்லது பயணத்தை ரத்து செய்து கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது

மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்த மாற்றத்தை செய்து கொள்ள இண்டிகோ கால அவகாசம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.