shadow

கவனக்குறைவால் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்திய அணி

ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்று கூறுவது போல், வங்கதேச அணியை வீழ்த்தி ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆக இருந்த இந்திய அணியை சுருட்டி எடுத்துவிட்டது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சில் அனல் பறந்தது இதனால் இந்திய அணி வெறும் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விராத் கோஹ்லி உள்பட 8 பேட்ஸ்மேன்கள் டக் மற்றும் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

155 ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது 298 ரன்கள் பெற்று முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Leave a Reply