shadow

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபார ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்தியது!

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி 53 பந்துகளில் 79 ரன்கள் அடித்து ஆட்டநாயகி விருதினை பெற்றார்.