கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அபார சதம்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி!

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அபார சதம்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நேற்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அபார சதம் அடித்ததால் இங்கிலாந்து அணியை இந்திய மகளிர் அணி தோற்கடித்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்தது.

334 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது