shadow

தென்னாபிரிக்கா செல்கிறது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.

இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் மற்றும் துணை கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்திய அணியில் மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜெமிமா, தீப்தி, அனுஜா பாட்டீல், தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பிரவீண் (விக்கெட் கீப்பர்). பூணம் யாதவ், கயாக்வாட், ஜூலன், ஷிகா பாண்டே, பூஜா வாஸ்ட்ராகர், ராதா யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டி-20 போட்டி வரும் பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்குகிறது.

Leave a Reply