சீனாவில் பழுதுபட்டு நின்றிருந்த இந்திய எண்ணெய்க்கப்பல் தீப்பிடித்து எரிந்த விபத்தில் சீன தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.

50 ஆயிரம் டன் எண்ணெய் ஏற்றிய இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று சீன கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அதில் பழுது ஏற்பட்டது. பழுதை சரிப்படுத்த அந்த கப்பல் சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள சவுஷான் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பழுது நீக்க கொண்டு வரப்பட்டது. பழுதை நீக்குவதற்கு முன்பாக அந்த கப்பலில் இருந்த எண்ணெய் பேரல்களை இறக்கும் பணியில் சீன ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு கப்பல் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி எண்ணெய் பேரல்கள் வெடித்து சிதறியது. இந்த தீவிபத்தில் கருகி 7 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து சீன போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply