shadow

இந்திய பங்குச்சந்தையை ஆட்டம் காணவைத்த டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், பதவியேற்றா முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் எடுத்த அதிரடிகளில் ஒன்று H1B விசாவில் திருத்தம் செய்யப்பட்ட மசோதா.

இந்த மசோதா தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் ஐ.டி.துறையில் பணிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் இதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த மசோதா இன்று தாக்கல் ஆனதை அடுத்து இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களின் பங்குமதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. குறிப்பாக டிசிஎல், ஹெச்.சி.எல், விப்ரோ, ஆகிய நிறுவனங்களின் பங்குமதிப்பு இந்திய பங்குச்சந்தையில் கடுமையாக சரிந்துள்ளது.

Leave a Reply