இந்தியாவை சேர்ந்தவர் வினோத் ஜானி குமார் (31). இவர் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா பகுதியில் உள்ள யூரெல்லாவில் ஊனமுற்றோருக்கு உதவும் மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தார்.

அப்போது, கால் ஊனமுற்ற 3 பெண்களை கற்பழித்தார். அதை தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து இவர் மீது விக்டோரியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பெலிசிட்டி ஹேம்பெல் நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றவாளி வினோத் ஜானிகுமாருக்கு 18 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply