வங்கியில் கணக்கு தொடங்க மத விபரங்கள் கட்டாயமா? அதிர்ச்சி தகவல்

வங்கிகளில் கணக்கு தொடங்க மத விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று வெளியாகியுள்ள வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது மத்திய நிதிச்செயலாளர் ராஜீவ் குமார் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:

வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு இந்திய குடியுரிமை பெற்றவர் தான் என்பதற்கான ஆவணங்கள் அல்லது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் தான் என்பதற்கான ஆவணங்கள் கேட்கப்படுவதில்லை. இதுகுறித்து வெளியாகி வரும் அடிப்படையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்

2018 ஆம் ஆண்டு ரிசர்வ் பேங்க் இதுகுறித்த சர்க்குலர் ஒன்றை வெளியிட்டதாக பரவிவரும் வதந்திகளும் பொய்யானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஆனால் இதற்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அப்ளிகேசனில் மத விவரங்கள் குறிப்பிடப்படவேண்டும் என இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கான சான்றுகள் தேவையில்லை என்பதும் இந்த விபரத்தை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply