shadow

வெறும் 12 டாலருக்கு கூகுள்.காம் இணையதளத்தை விலைக்கு வாங்கிய இந்தியர்

googleஉலகிலேயே முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கூகுள் நிறுவனத்தின் மதிப்பு இன்றைய காலகட்டத்தில் பல பில்லியன் டாலர் இருக்கும் நிலையில் வெறும் 12 டாலருக்கு இந்தியர் ஒருவர் கூகுள்.காம் இணையதளத்தை வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு கூகுள்.காம் ஒரு நிமிடம் மட்டுமே சொந்தமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்து வரும் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத் தில் உள்ள மந்த்வி என்பவர், சமீபத்தில் கூகுள் டொமைன்ஸ் பகுதிக்கு சென்று புதிதாக ஏதாவது இணைய முகவரிகள் விற்பனைக்கு இருக்கிறதா என்று பார்த்துள்ளார். அப்போது, ‘கூகுள்.காம் விற்பனைக்கு’ என்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை கிளிக் செய்த போது ‘கூகுள்.காம்’இணையதள முகவரியை 12 டாலருக்கு வாங்கலாம் என்று தெரிந்தவுடன் உடனே  தன்னுடைய கிரெடிட் கார்டில் இருந்து பணம் செலுத்தினார். வெறும் 12 டாலருக்கு உடனடியாக கூகுள்.காம் இணைய முகவரி சான்மே வேத் பெயருக்கு மாறி விட்டது.

ஆனால் ஒரு நிமிடம் கழித்து கூகுள் டொமைன்ஸ் ஒரு தகவல் அனுப்பியது. அதில், ‘சான்மே வேத்தின் ஆர்டர் ரத்து செய்யப்படுவதாகவும் அந்த முகவரி ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து வேத் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ‘‘தொழில்நுட்ப கோளாறு இருந்திருக்கலாம். அதனால் நான் கேட்டதும் கூகுள்.காம் எனக்கு விற்கப்பட்டிருக்கலாம். கூகுள் முகவரியை அந்த நிறுவனம் புதுப்பிக்கவும் தவறியிருக்கலாம்’’ என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்த சான்மே வேத்துக்கு கூகுள் நிறுவனம் பரிசாக 6006.13 டாலர் (சுமார் ரூ.4.07 லட்சம்) வழங்கியது. அந்த பணத்தை ‘ஆர்ட் ஆப் லிவிங் இண்டியா பவுண்டேஷன்’ அறக்கட்டளைக்கு வழங்குவதாக வேத் அறிவித்தார். இதையடுத்து பரிசு தொகையை கூகுள் நிறுவனம் இரண்டு மடங்காக்கி அறிவித்தது. மொத்தம் 8 லட்சம் ரூபாய் சான்மே வேத்துக்கு கிடைத்தது.

Leave a Reply