இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில், யூசுப் பதான் தலைமையிலான இந்தியா சிவப்பு அணியுடன் இந்தியா நீலம் அணி மோதியது. டாசில் வென்ற இந்தியா சிவப்பு அணி முதலில் பந்துவீசியது. இந்தியா நீலம் அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 345 ரன் குவித்தது.  கேப்டன் யுவராஜ் 84 ரன் (53 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), அக்ஷத் ரெட்டி 84 ரன், மனிஷ் பாண்டே 70 ரன், நமன் ஓஜா 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அபிஷேக் நாயர் 75 ரன், பாவ்னே (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா சிவப்பு அணி 11 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அந்த அணி 49.5 ஓவரில் 334 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. முகுந்த் 83 ரன் (86 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), கேதார் ஜாதவ் 49 ரன், ஜக்கி 34, குர்கீரத் 22, மிதுன் 11, நதீம் 27, உமேஷ் யாதவ் 19 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்மித் பட்டேல் 68 ரன் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடர்ச்சியாக 2 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்ற இந்தியா நீலம் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. டெல்லி , இந்தியா சிவப்பு அணிகளிடையே இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, நாளைய பைனலில் இந்தியா நீலம் அணியை எதிர்கொள்ளும்.

Leave a Reply