shadow

தாய்ப்பால் கொடுத்த பெண்ணை மறைந்திருந்து படம் பிடித்த இந்தியருக்கு தண்டனை?

motherஇங்கிலாந்து நாட்டில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது அதை மறைந்திருந்து புகைப்படம் எடுத்த இந்திய வம்சாவளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதுபோன்ற இன்னும் பல குற்றங்களை செய்துள்ளதால் விரைவில் அவருக்கு  தண்டனை வழங்கப்பட உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன..

இங்கிலாந்து நாட்டின் சோமர்செட் கவுண்டி என்ற பகுதியில் உள்ள பராகான் தெருவில், பூங்கா ஒன்றில் ஒரு பெண் தன்னுடைய ஆறு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த அப்பெண்ணை மறைந்திருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர் பெயர்  சலீம் படேல். 38 வயதுடைய அந்த நபர் வைத்திருந்த போன் மற்றும் அவரது கம்ப்யூட்டரை சோதனை செய்து பார்த்த போலீசார், அதில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையின்போது சலீம் படேல், கடந்த இரண்டு வருடங்களாக நகரும் படிக்கட்டுகளில் மினி ஸ்கர்ட் அணிந்தபடி ஏறும் பெண்களை கீழே இருந்து படம்பிடித்ததும், அவர்கள் கழிவறையில் இருக்கும் அந்தரங்க தருணங்களை படம்பிடித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின்போது, அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து, தண்டனை அறிவிக்கும் தேதி செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply