shadow

வெற்றியை நெருங்கிவிட்ட ஹாங்காங்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருந்த ஹாங்காங் அணி கடைசி நேரத்தில் விக்கெட்டுக்கள் மளமளவென விழுந்ததால் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

286 என இந்தியா கொடுத்த இலக்கை நோக்கி விளையாடிய ஹாங்காங் அணி முதல் விக்கெட்டை 174வது ரன்னில்தான் இழந்தது. இதனால் ஹாங்காங் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலை இருந்தது.

ஆனால் அதன்பின்னர் சுதாரித்த இந்திய அணி மளமளவென 8 விக்கெட்டுக்களை வீழ்த்தியதால் இறுதியில் ஹாங்காங் அணி 259 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 285/7 50 ஓவர்கள்

ஷிகர் தவான்: 127 ரன்கள்
ராயுடு: 60 ரன்கள்

ஹாங்காங்: 259/8 50 ஓவர்கள்

நிஜாகத்கான்: 92
அனுஷுமான்ரத்: 73

 

Leave a Reply