shadow

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட். 108 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
India v SA 1st Test D2
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சண்டிகாரில் நடந்து வந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனிடையே நேற்று தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 200 ரன்கள் எடுத்ததால் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி பெற 218 என் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சு காரணமாக தென்னாப்பிரிக்க அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Reply