விராத் கோஹ்லி சதத்தால் மீண்டும் வெற்றி! இந்திய அணி அபாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியின் அபார சதம் காரணமாக நேற்று நடைபெற்ற 6வது ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. அதுமட்டுமின்றி இந்த தொடரில் 558 ரன்கள் குவித்த விராத் கோஹ்லி ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளார்.
நேற்றைய 6வது ஒருநாள் போட்டியின் ஸ்கோர் விபரம்
தென்னப்பிரிக்கா அணி: 204/10 46.5 ஓவர்கள்
ஜோண்டோ: 54
டிவில்லியர்ஸ்: 30
ஃபெலுக்வாயோ: 34
இந்திய அணி: 206/2 32.1 ஓவர்கள்
விராத் கோஹ்லி: 129
ரஹானே: 34
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான டி-20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. பிப்ரவரி 18, 21, 24 ஆகிய தேதிகளில் மூன்று டி-20 போட்டிகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.