shadow

பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி: ரோஹித், யுவராஜ் அபார ஆட்டம்

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அதை ஒரு விளையாட்டு போட்டியாக பார்க்காமல் அதை இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் போல பார்க்கும் வழக்கம் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு மனநிலை இருப்பதுண்டு.

அந்த வகைய்யில் இங்கிலாந்து நாட்டில் நேற்று இரண்டு வருடங்களுக்கு பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின, இந்த போட்டியில் வழக்கம் போல பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைத்த இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி ரோஹித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி நிதானமான ஆட்டத்தை முதல் பத்து ஓவர்களில் வெளிப்படுத்தினர். பின்னர் அடிக்க தொடங்கிய நிலையில் ரோஹித் 91 ரன்களிலும், தவான் 68 ரன்களிலும் அவுட் ஆகினர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் யுவராஜ்சிங் ஜோடி, பாகிஸ்தான் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தது. விராத் கோஹ்லி 81ரன்களும், யுவராஜ் சிங் 53 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 48 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்தது. முன்னதாக மழை பெய்ததால் போட்டி 48 ஓவர் கொண்டதாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இதனிடையே 320 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாட பாகிஸ்தான் களமிறாங்கியது. ஆனால் மீண்டும் மழை குறுக்கிட்டதாக் பாகிஸ்தானுக்கு 41 ஓவர்களில் 289 என்ற இலக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. அந்த ணி இறுதியில் 33.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்கரர் அசார் அலி மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 50 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் யுவராஜ் சிங் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.

Leave a Reply