தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வென்றது இந்தியா
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று போர்ட் எலிசபெத் நகரில் 5வது போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அபார சதத்தால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 274 ரன்கள் குவித்தது.
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியை குல்தீப் யாதவ் சுழல்வீச்சால் 201 ரன்களுக்க்கு இந்திய அணி ஆல் அவுட் ஆக்கியது. இதனால் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை வெல்வது இதுவே முதல்முறை ஆகும். இரு அணிகளுக்கும் இடையிலான 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.