shadow

அருண்ஜெட்லி கூறியது சரிதான்: இந்தியாவுக்கு மீண்டும் சீனா எச்சரிக்கை

இந்தியா, சீனா எல்லைப்பிரச்சனை அவ்வப்போது சிறிய அளவில் நடந்த நிலையில் தற்போது இந்தியா, பூடான் எல்லையில் சீனா சாலைகள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் போர் மூளும் அளவுக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சீனாவுடன் மோதினால் இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் 1962ஆம் ஆண்டு போரை இந்தியா நினைவில் கொள்ள வேண்டும் என்றும் சீனா சமீபத்தில் எச்சரித்தது

இதற்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ‘ 1962-ம் ஆண்டு இருந்த இந்தியா வேறு; இப்போது இருக்கும் இந்தியாவின் நிலை வேறு’ என்று குறிப்பிட்டார்.

இதற்கு மீண்டும் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவின் ‘க்ளோபல் டைம்ஸ்’ பத்திரிகை, ‘இந்தியா போருக்குத் தயார் என்று கருதினால், சீனா அதன் ராணுவ பலத்தைக் காட்டவேண்டியிருக்கும். ஜெட்லி சொன்னது ஒரு விதத்தில் சரிதான். 1962-ம் ஆண்டு இருந்த இந்தியா வேறு; இப்போது இருக்கும் இந்தியா வேறுதான். போர் வந்தால், 1962-ம் ஆண்டைவிட இந்தியாவுக்கு இப்போது இழப்பு அதிகமாக இருக்கும். ஆனால், இரு தரப்பும் அமைதியாகப் போக வாய்ப்பு இருக்கிறது. இந்தியா, தனது தவறைப் புரிந்துகொண்டு, பூட்டான் எல்லையிலிருந்து படைகளை உடனே பெற வேண்டும்’ என்று எச்சரிக்கை விடும் தொனியில் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply