இந்தியாவுக்கு தொடர் வெற்றி கிடைக்குமா?

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா அபாரமாக வென்று உள்ளதை அடுத்து இன்று மூன்றாவது நாள் கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று விட்டால் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று விடும். இன்றைய போட்டியிலும் இந்தியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கடந்த 6ஆம் தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்திலும் 9ஆம் தேதி நடந்த 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது

பிப்ரவரி 16ஆம் தேதி முதல் இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது