shadow

237 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. சொந்த மண்ணில் தொடரை இழந்த மே.இ.தீவுகள்

Virat Kohliமேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஏற்கனவே ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று ஒரு டெஸ்ட் போட்டியில் டிரா செய்த நிலையில் நேற்று முடிந்த் 3வது டெஸ்ட் போட்டியிலும் அபார வெற்றி பெற்றதால் தொடரை வென்றுள்ளது. கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 237 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ் – 353/10 129.4 ஓவர்கள்
இந்தியா 2வது இன்னிங்ஸ் – 217/7 டிக்ளேர் 48 ஓவர்கள்

மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸ் – 228/10 103.4 ஓவர்கள்
மேற்கிந்திய தீவுகள் 2வது இன்னினிங்ஸ் – 108/10 47.3 ஓவர்கள்

முதல் இன்னிங்ஸில் சதமடித்ததோடு மூன்று விக்கெட்டுக்களை எடுத்த அஸ்வின் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று, தொடரையும் வென்றது. நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஆகஸ்D 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Leave a Reply