இன்று மதியம் கொச்சியில்1.30 மணிக்கு இந்தியா, மேற்கிந்திய தீவுகள் இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டித் தொடருக்கான கோப்பை நேற்று வெளியிடப்பட்டது. தோனி, பிராவோ போஸ் கொடுத்தனர்.

டெஸ்ட் போட்டியில் 2- 0 என்று படு மோசமான தோல்விகளை தழுவியதையடுத்து மேற்கிந்திய அணி ஒரு நாள் போட்டியில் கொஞ்சமாவது சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்த ஒருநாள் போட்டி 24ஆம் தேதி விசாகப்பட்டிணம் கடைசி ஒருநாள் போட்டி கான்பூர் இது மட்டும் பகல் ஆட்டமாகும். 9 மணிக்கு ஆட்டம் துவங்கும்.

Leave a Reply