மீண்டும் தென்னாப்பிரிக்காவிடம் சரண்டர் ஆன இந்தியா

மீண்டும் தென்னாப்பிரிக்காவிடம் சரண்டர் ஆன இந்தியா

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க நாடுகளின் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்ட தென்னாபிரிக்க அணி, நேற்று ஆரம்பித்த 3வது போட்டியிலும் இந்திய அணியை திணறடித்து வருகிறது

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களான முரளிவிஜய் மற்றும் ராகுல் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

அதன்பின்னர் கேப்டன் விராத் கோஹ்லி, புஜாரா ஆகியோர் சுதாரித்து இருவரும் அரைசதத்தை எட்டிய நிலையில் இருவரும் அவுட் ஆனவுடன் இந்திய அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென் வீழ்ந்தது.

இறுதியில் இந்திய அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி ஆட்டநேர இறுதியின்போது 1 விக்கெட்டை இழந்து 6 ரன்கள் எடுத்திருந்தது

Leave a Reply

Your email address will not be published.