இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர் குறித்து பிசிசிஐ முக்கிய தகவல்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு டெஸ்ட் தொடர் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது.

ஆனால் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால்இந்த தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இதுகுறித்து மேலும் கூறியபோது இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், இந்தியா தென்னாப்பிரிக்கா செல்லும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.