இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் திடீர் ரத்து

இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் திடீர் ரத்து

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாபிரிக்க அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்த நிலையில் தர்மசாலாவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் லக்னோவில் நடைபெற இருந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பீதி காரணமாகவே இந்த இரண்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ விளக்கம் தெரிவித்துள்ளது

மேலும் மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகளும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.