பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்த போட்டியில் உலக சாதனை!

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதியது என்பதும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த போட்டி தற்போது உலக சாதனை செய்துள்ளது. டி 20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிக அளவிலான பார்வையாளர்களை பெற்ற போட்டி இந்த போட்டி தான்

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான நடந்த டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டி தான் இதுவரை அதிக பார்வையாளர்களை பெற்று இருந்தது.

இந்த நிலையில் தற்போது அந்த சாதனையை அக்டோபர் 24ஆம் தேதி நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி முறியடித்துள்ளது