shadow

இந்தியாவின் தோல்வியை தவிர்த்த மழை: நியூசிலாந்து வீரர்கள் அதிருப்தி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.

ஏற்கனவே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது