இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று இரண்டாவது டெஸ்ட், வெல்லிங்டன் நகரில் ஆரம்பமானது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால், நியூசிலாந்து அணி 192 ரன்களுக்குள் சுருண்டது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இஷாந்த் சர்மா, மற்றும் முகம்மது ஷமியின் அபார பந்துவிச்சால், 192 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. வில்லியம்சன் மட்டுமே 47 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு தாக்கு பிடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

இஷாந்த் சர்மா 6 விக்கெட்டுக்களையும், முகம்மது ஷமி 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். அதன்பின்னர் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடக்கிய இந்திய அணி, ஆட்டநேர முடிவின்போது 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்தது. தவான் 71 ரன்களுடனும், நைட் வாட்ச்மேனாக இறங்கிய இஷாந்த் சர்மா 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர்.

Leave a Reply