இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, நேற்று முன் தினம் நியூசிலாந்து IX அணியுடன் இரண்டு நாள் போட்டி ஒன்றில் மோதியது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து IX அணி, 78 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி, 93 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 59 ரன்களும், ரஹானே 60 ரன்களும் எடுத்தனர். எனவே இந்த ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடயே ஆன முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 6ஆம் தேதி ஆக்லாந்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.

Leave a Reply