உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: இந்தியா 7 விக்கெட்டுக்களை இழந்து தவிப்பு

கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது. இதனை அடுத்து அந்த அணி பந்து வீச முடிவு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது

சற்று முன் வரை இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. கோஸ்வாமி மற்றும் ரிச்சா கோஷ் ஆகிய இருவரும் களத்தில் நின்று உள்ளனர்

இந்திய அணி ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடி அதில் இரண்டில் வெற்றி ஒன்றில் தோல்வி அடைந்து நான்காவது இடத்தில் உள்ளது