இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிக்கான வீரர்கள் அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிக்கான வீரர்கள் அறிவிப்பு

இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் போட்டி தொடர் ஆகிய இரண்டையும் வென்றுவிட்ட இந்திய அணி, அடுத்து டி-20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் போட்டி கான்பூரில் 26-ந் தேதியும், 2-வது போட்டி நாக்பூரில் 29-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் பிப்ரவரி 1-ந் தேதியும் நடக்கிறது.

இந்த போட்டி தொடரில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த போட்டி தொடரின் இந்திய அணி வீரர்கள் விபரம் பின்வருமாறு:  லோகேஷ் ராகுல், மன்தீப்சிங், விராட்கோலி (கேப்டன்), தோனி, யுவராஜ்சிங், சுரேஷ்ரெய்னா, ரிஷாப் பான்ட், ஹர்திக் பாண்ட்யா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், யுஸ்வேந்திரா சாஹல், மனிஷ் பாண்டே, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், நெஹரா.  

Leave a Reply

Your email address will not be published.