இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவை கொரோனா வைரஸ் காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்தது

இந்த நிலையில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யபப்ட்டுள்ளது.

இந்தியா-சிங்கப்பூர் இடையிலான விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியது என்பதும், சென்னை – சிங்கப்பூர், டெல்லி – சிங்கப்பூர் மற்றும் மும்பை – சிங்கப்பூர் ஆகிய விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் தினமும் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 6 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.