shadow

bhutan sushmaஇந்திய பிரதமர் மோடி, தனது முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக நேற்று சென்றுள்ளார். அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் சென்றுள்ளார்.

இன்று பூடான் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பூடானின் உள்ள 20 மாவட்டங்களில் மின்னணு நூலகம் அமைக்க இந்தியா பண உதவி செய்யும் என்றும், அதற்காக ஏற்பாடுகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பூடானின் வளர்ச்சி திட்டங்களில் இந்தியா தனி அக்கறை கொண்டுள்ளது என்று தெரிவித்த சுஷ்மா, ஏற்கனவே உறுதியளித்தபடி பூடானின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி அளிக்கும் என்றார். முன்னதாக பூடான் மன்னரின் மனைவி Jetsun Pema Wangchuk அவர்கள் சுஷ்மாவை கட்டிப்பிடித்து பூடான் நாட்டு வழக்கப்படி சிறப்பான வரவேற்பை அளித்தார்.

இன்று பூடான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அந்த சமயத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவும் உடனிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply