விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் படத்துடன் சிறப்பு அஞ்சல் தலை

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் படத்துடன் சிறப்பு அஞ்சல் தலை

சமீபத்தில் மறைந்த இங்கிலாந்து நாட்டு இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்திய பிரதமர் உள்பட அனைத்து தலைவர்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்திய தபால்துறை அவரது புகைப்படத்துடன் சிறப்பு தபால் தலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.

இதுதொடர்பாக, அஞ்சல் துறை அதிகாரிகள் கூறுகையில், விஞ்ஞானி ஹாக்கிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது தபால் தலை 22 நகரங்களில் வெளியிடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.

ஸ்டீபன் ஹாக்கிங், அஞ்சல் தலை, தபால் துறை, இங்கிலாந்து, இயற்பியல் விஞ்ஞானி
India post releases special stamp on stephen hawking

Leave a Reply

Your email address will not be published.