கிரிக்கெட்டில் மட்டுமல்ல பொருளாதாரத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி முன்னுக்கு வந்துள்ளது இந்தியா.

கிரிக்கெட்டில் மட்டுமல்ல பொருளாதாரத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி முன்னுக்கு வந்துள்ளது இந்தியா.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது. மேலும் ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டுக்கு அடிமையாக இருந்த இந்தியா இன்று இங்கிலாந்தை பொருளாதாரத்தில் பின்னுக்கு தள்ளியுள்ளது

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது. 2 மற்றும் 3-வது இடங்களில் சீனா, ஜப்பான் நாடுகளும் 4 மற்றும் 5-வது இடங்களில் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளும் உள்ளன.

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து உயர்வது மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியது போன்ற காரணங்களால் இந்தியா இப்பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

அடுத்த ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவீதமாக இருக்கும் என்றும், அதே நேரம் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.8 சதவீதத்தில் இருந்து 1.1. சதவீதமாக சரியும் என கணிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.