shadow

ஆசிய கண்டத்தில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்: இந்தியா முதலிடம்

ஆசிய கண்டத்தில் ஊழல் அதிகமுள்ள நாடுகள் குறித்த பட்டியல் ஒன்றை டிரான்பரன்சி இன்டர்நேசனல் என்ற தனியார் அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளிவந்தூள்ள நிலையில் இந்த பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளில் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழல் ஒழிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூடிய விரைவில் இந்த பட்டியலில் இந்தியா கடைசி இடத்திற்கு செல்லும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் தென்கொரியா நாடு, ஊழல் பட்டியலில் பின்தங்கி இருந்தாலும், ஊழல் ஒழிப்பில் தங்கள் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply