2வது ஒருநாள் போட்டியிலும் சொதப்பல்: தொடரை இழந்தது இந்தியா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணி தொடரை இழந்தது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 48.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 288 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் மலன் 91 ரன்கள் எடுத்த நிலையில் 66 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த குவிண்டன் டீகாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறும்