300 ரன்களுக்கும் மேல் லீடிங் பெற்ற இந்தியா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 406 ரன்கள் எடுத்துள்ளது.
இதனால் இந்திய அணி தற்போது 307 ரன்கள் லீடிங் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்திருந்தது என்பதும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில், 290 ரன்கள் எடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

300க்கும் மேல் லீடிங் பெற்றுள்ளதால் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது