வாட்ஸ் ஆப் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்தியா காரணமா?

 whatsapp

குறுந்தகவல் அனுப்பப் பயன்படும் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டி வெற்றிநடை போடுகிறது. இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில், இந்தச் செயலி பிரபலமடைந்து வருவது இதற்கு முக்கியக் காரணமாகும்.

வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தலைவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்:

“உங்கள் அனைவருக்கு நன்றி. உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயனர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாக, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ரஷியா ஆகிய நாடுகளில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஒரு நாளில் 70 கோடி புகைப்படங்களும் 10 கோடி வீடியோக்களும் பகிரப்படுகின்றன.

மார்ச் மாதம் வரை வாட்ஸ் ஆப் பயனர்களின் எண்ணிக்கை 45 கோடியாக இருந்தது. இதில் 32 கோடி பயனர்கள் தினமும் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களாக இருந்தனர்.

இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயல்பாடு சிறப்பாக, சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலும் உள்ளது. இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் பலர், உயிர்களைக் காப்பாற்ற வாட்ஸ் ஆப் மூலம் இ.சி.ஜி. மற்றும் இருதய நோயாளியின் புகைபடங்களை அனுப்புகின்றனர். இதனால் தாமதமின்றி சிகிச்சை அளிக்க முடிகிறது”

2009-ஆம் ஆண்டு உக்ரைனைச் சேர்ந்த ஜான் கூம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரியான் ஆக்டன் ஆகிய இருவரால் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப் நிறுவனத்தை, கடந்த பிப்ரவரி மாதம் 19 பில்லியன் டாலருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply