shadow

சீன அத்துமீறலுக்கு முடிவு கட்ட ரூ.6,700 கோடியில் உளவு விமானங்கள். மத்திய அரசு அதிரடி

flightஅருணாச்சல பிரதேசத்தில் இருந்த சீனாவின் அத்துமீறல் தற்போது உத்தரகாண்ட் மாநிலம் வரை நீண்டு கொண்டே போவதால், சீனாவின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரூ.6,700 கோடியில் புதிய உளவு விமானங்கள் வாங்க முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘இது, விமான கொள்முதலில் அடுத்தகட்ட நடவடிக்கை தான். மொத்தம், 4 உளவு விமானங்களைப் பெற போயிங் நிறுவனத்துடன் சமீபத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, சுமார் ரூ.6,710 கோடி. அடுத்த 3 ஆண்டுகளில் இந்த விமானங்கள் செயல்பாட்டில் இருக்கும்’ என்றார்.

போயிங் நிறுவனத்தின் இந்திய செய்தித் தொடர்பாளர் அம்ரிதா தின்ஷா, எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கும் ஏவு கணைகளை பொருத்தும் வசதியும் அதில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதாவது நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் தொடுக்கப்படும் ரகசிய தாக்குதல்களை சமாளிக்கவும், அத்துமீறலை தடுக்கவும் இந்த வகை விமானங்கள் பயன்படும்.

பல்வேறு நீர்மூழ்கி கப்பல்களின் ரகசிய இயக்கத்தை சீன கடற்படை அவ்வப்போது அத்துமீறி விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்திய கடற்படை தனது கண்காணிப்புத் திறன் மற்றும் நடவடிக்கைகளை கூர்மைப்படுத்தியும், மேம்படுத்தி வருகிறது. இந்த சூழலில் போயிங் நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply