shadow

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது

இந்தநிலையில் 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது