shadow

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. 112 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா வரும் பிப்ரவரி 2ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் மோதும்