கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா: கடைசி நேரத்தில் கோட்டைவிட்ட வங்கதேசம்

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா: கடைசி நேரத்தில் கோட்டைவிட்ட வங்கதேசம்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையே இன்று நடந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது

185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மழை குறுக்கிட்டதால் வங்கதேச அணிக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது

ஆனால் வங்கதேச அணி 16 ஓவரில் 146 ரன்கள் மட்டும் எடுத்ததால் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி தற்போது 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது