shadow

 india vs pakகடந்த சில நாட்களாக பாகிஸ்தான் எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாட்டு எல்லையில் பதட்டமான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி பாகிஸ்தானின் எல்லை மீறலை வேடிக்கை பார்க்க மாட்டோம். தக்க பதிலடி கொடுப்போம் என்று அதிரடியாக எச்சரிக்கை விடுத்தார். இதற்கு இன்று பதிலளித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர், “இந்தியா தாக்குதல் நடத்தினால் அதற்கு தகுந்த பதிலடி தர எங்களிடமும் போதிய பலம் உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்திய எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து கருத்து தெரிவித்த அருண் ஜெட்லி, ”அத்துமீறலை சாகசம் என கருதிக் கொண்டு பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்திய தரப்பும் சாகசம் செய்யும். ஆனால், அது தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு இருக்கும்” என்று பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், அதற்கு உடனடியாக பதிலளித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், ”எச்சரிக்கையுடனும், கட்டுப்பாட்டுடனும் இந்தியா நடந்து கொள்ள வேண்டும். இரு அணு சக்தி நாடுகளிடையேயான எல்லைப் பிரச்னையைப் பெரும் மோதலாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை.

அதே நேரம், இந்தியாவின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய திறன் எங்கள் நாட்டுக்கு உள்ளது” என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply